Home /News /entertainment /

Valimai : அஜித் படத்தை பார்த்த தணிக்கைக்குழு.. வலிமையின் ரன்னிங் டைம் குறித்த விவரம் வெளியானது!

Valimai : அஜித் படத்தை பார்த்த தணிக்கைக்குழு.. வலிமையின் ரன்னிங் டைம் குறித்த விவரம் வெளியானது!

வலிமை

வலிமை

வலிமை மிக நீளமாக திரைப்படம் 2 மணி 58 நிமிடங்கள் ஓடுகிறது. பாஸ்ட் ஃபுட் உலகில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ரசிகர்களை போரடிக்காமல் உட்கார வைப்பது சிரமம்.

வலிமை படம் ஜனவரி 13 வெளியாவதை முன்னிட்டு தணிக்கைக்குழுவுக்கு படம் திரையிடப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமா விஜய்யின் மாஸ்டருடன் தொடங்கியது.கொரோனா முதல் அலைக்குப் பின் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வந்த திரைப்படமாக அது அமைந்தது. 2022 அஜித்தின் வலிமையுடன் தொடங்குகிறது. ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சூழலில் வலிமை வெளியாகிறது.படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க.. என்னாச்சு பிக் பாஸ் குழுவுக்கு ? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.. இது தான் காரணமா?

வலிமை மிக நீளமாக திரைப்படம் 2 மணி 58 நிமிடங்கள் ஓடுகிறது. பாஸ்ட் ஃபுட் உலகில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ரசிகர்களை போரடிக்காமல் உட்கார வைப்பது சிரமம். அதேநேரம் கதையும், காட்சியும் சுவாரஸியமாக இருந்தால் மூன்றுமணி நேரம் தாராளமாகப் பார்ப்பார்கள். வலிமையில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம். அது அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் படம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் வருகிறது.

இதையும் படிங்க..நடிகர் விஜய் பற்றி பேசிய ஜூனியர் என்.டி.ஆர்.. ஷாக்கில் ரசிகர்கள்!

ஜனவரி 7 வெளியாகிற ஆர்ஆர்ஆர் படம் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடுகிறது. அதுவும் முழுக்க சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். அதனால், வலிமையின் நீளம் ஒரு பொருட்டில்லை. சமீபத்தில் வெளியான வலிமை ட்ரெய்லர் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது. படம் வசூல் சாதனை படைக்கும் என்பது திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: Actor Ajith, Pongal festival, Valimai

அடுத்த செய்தி