வலிமை படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிமை படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடுவதாகத்தான் முதலில் திட்டமிட்டிருந்தனர். பிறகு இந்தியிலும் வெளியிடுவது என முடிவு செய்து இந்தி டப்பிங் செய்யப்பட்டது. இந்நிலையில் படவெளியீடு தள்ளிப்போக, வலிமையை மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. வலிமை வெளியாகும் போது மூன்றுக்கு பதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும்.
இதையும் படிங்க :
காலத்தால் அழியாத பாடல்கள்... தென்னிந்திய சினிமாவின் இசையரசி பி.சுசிலாவின் திரைப் பயணம்
வலிமை படத்தின் ஹைலைட்டே அதன் சண்டைக் காட்சிகள் தான். ஆக்ஷன் படங்களுக்கு தான் மொழி தேவையில்லையே. அதனால் படம் அனைத்து மொழி ரசிகர்களையும் எளிதாக சென்றடையும் என்ற கோணத்தில் ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர். புஷ்பா படத்துக்கு கிடைத்த வரவேற்பும் இதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு வெளியீட்டின் ட்ரெய்லர் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தெலுங்கு, இந்தி ட்ரெய்லர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடிடி வந்த பிறகு எந்த மொழியில் தயாராகும் படத்தையும் குறைந்தது ஐந்து மொழிகளில் வெளியிட்டுவிடுகிறார்கள். புஷ்பா போன்ற படங்கள் திரையரங்குகளிலேயே ஐந்து மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ரேக்ளா ரேஸ்... ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்ட பந்தயம்
ஜனவரி 13-ம்தேதி வெளியாக வேண்டிய அஜித்தின் வலிமை கொரோனா பாதிப்பு காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டின்போது திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. என்றைக்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களோ, அப்போதுதான் படம் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.