Home /News /entertainment /

Valimai: நீளம் அதிகம்... ட்ரிம் செய்யப்பட்ட அஜித்தின் வலிமை

Valimai: நீளம் அதிகம்... ட்ரிம் செய்யப்பட்ட அஜித்தின் வலிமை

வலிமை

வலிமை

Valimai: வலிமை படம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் 4 வினாடிகள் ஓடக்கூடியது. இதன் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் பல காட்சிகளை எடிட் செய்து தூக்கி இருக்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக படத்தின் நீளம் அதிகம் என்ற விமர்சனம் அனைவரிடமும் உள்ளது. இதனால் 10 நிமிடத்திற்கு மேல் காட்சிகளை எடிட் செய்து இருக்கிறார்கள்.

வலிமை படம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் 4 வினாடிகள் ஓடக்கூடியது. இதன் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் பல காட்சிகளை எடிட் செய்து தூக்கி இருக்கிறார்கள். இப்போது படம் 2 மணிநேரம் 48 நிமிடங்கள் 44 வினாடிகள் மட்டுமே வருகிறது. அதாவது பத்து நிமிடங்களுக்கு மேல் காட்சிகளை வெட்டி எறிந்து உள்ளனர். இதேபோல் இந்திப் பதிப்பில் சுமார் 13 நிமிட காட்சிகளை எடிட் செய்து தூக்கி இருக்கிறார்கள்.

வலிமை படத்தின் சென்டிமென்ட் காட்சிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை. ரசிகர்களை அந்த காட்சிகள் கவரவில்லை. அதனால் சென்டிமெண்ட் காட்சிகளில் நீளத்தை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. வார நாட்களில் படத்திற்கு கூட்டம் வர வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

Also read... Valimai: வலிமை ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு...?

வலிமை ஓபனிங் நாளில் மிகப்பெரிய வசூலை பெற்றது. அதன் இரண்டாவது நாளிலும் கூட்டம் குறையவில்லை. வார இறுதி என்பதால் இன்றும் நாளையும் அதிக ரசிகர்களை திரையரங்கில் எதிர்பார்க்கலாம். ஆனால் வார நாட்களில் இந்த கூட்டத்தை படம் தக்க வைக்குமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. படத்தின் நீளத்தை குறைத்து இருப்பது திரையரங்குகளுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Ajith, Valimai

அடுத்த செய்தி