Home /News /entertainment /

வலிமை பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி தள்ளிவைப்பு - போனி கபூர் அறிவிப்பு

வலிமை பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி தள்ளிவைப்பு - போனி கபூர் அறிவிப்பு

போனி கபூர் - அஜித்

போனி கபூர் - அஜித்

கொரோனா 2வது அலை பரவல் காரணமாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா 2வது அலை பரவல் காரணமாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை வேறு ஒரு தேதிக்கு தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாங்கள் கொடுத்த முந்தைய அறிக்கையில், வருகின்ற மே 1ம் தேதி அஜித்குமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில், வினோத் இயக்கத்தில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.

    அந்த அறிவிப்பு வெளிவரும் போது, கொரோனா நோயின் இரண்டாவது அலை வரும் என்றோ, அதன் தாக்கம் சுனாமி போல தாக்கும் என்றோ சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணத்தில் தேசமெங்கும் எண்ணற்றோர் பொருளாதாரம் இழந்து, உற்றார் உறவினர் உயிரிழந்து, நோய் பற்றிய பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்து இருக்கின்றனர்.

    இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ ப்ரொஜெக்ட்ஸ், இப்படத்தில் நடித்து உள்ள கலைஞர்கள், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து எடுத்துள்ள முடிவின் படி ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றுமொரு தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

    நாம் அனைவரும் ஒற்றிணைந்து அனைவரின் நலத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி