Valimai FirstLook: அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Valimai FirstLook: அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

அஜித் குமார்

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

முருக கடவுள் தொடங்கி பிரதமர், முதலமைச்சர், கிரிக்கெட் வீரர்கள் என முக்கிய பிரபலங்கள் பலரிடம் தொடர்ச்சியாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்த நிலையில் அதற்கு விடை கிடைத்திருக்கிறது. அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மே மாதம் முழுவதும் ‘வலிமை’ குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



முன்னதாக ‘வலிமை’ படத்தில் அஜித்தின் ஓபனிங் பாடல் துள்ளலிசை பாடலாக அமைத்திருப்பதாகவும், விக்னேஷ் சிவன் எழுதியிருக்கும் அந்தப் பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் ஒடிஷாவிலிருந்து திருவிழா ட்ரம்ஸ் கலைஞர்களை அழைத்து வந்து முதல் பாடலை பதிவு செய்ததாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தெரிவித்திருந்தார்.

அஜித் வெளியிட்ட அறிக்கை

என் ரசிகர்கள் என்ற பெயரில் நடித்திருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு அஜித் தெரிவித்திருந்தார்.
Published by:Sheik Hanifah
First published: