நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த பொங்கல் அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா தொற்றால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. நேர்கொண்ட பார்வை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாக இருந்தது ரசிகர்களை அப்செட்டாக்கியது. அதனை சரி செய்யும் விதமாக வலிமை படத்தில் குடும்ப சென்டிமெண்ட் உடன் ஆக்ஷன் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நிரூபிக்கும் விதமாக தல அஜித் பைக்கில் செம்ம மாஸாக சண்டை போட்ட காட்சிகள் டீசர் மற்றும் டிரெய்லரில் இடம் பெற்றிருந்தன. “வலிமைன்றது அடுத்தவன காப்பாத்த தான்... அழிக்க இல்ல” என அஜித் பேசும் மாஸ் வசனத்துடன் கூடிய ட்ரெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி தாறுமாறு வைரலானது.
படம் எப்போது திரைக்கும் வரும் என ரசிகர்கள் காத்துக்கிடந்த நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. படத்தின் ரீலிஸை முன்னிட்டு புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளிலேயே வலிமை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்ய வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் படத்தை ஒதுக்கும் முன்னணி தொலைக்காட்சி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி திரையிடப்பட்டால் முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் வலிமை திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தும் என்ற தகவல் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது சவுதி போன்ற வெளிநாட்டிலும் வலிமை படத்திற்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
வலிமை படத்தைப் பார்த்த பெற்றோர்... மனம் நெகிழ்ந்த அஜித்!
அஜித் நீண்ட இடைவேளைக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதால் படத்தை காண வெறித்தனத்துடன் காத்திருக்கின்றனர். வலிமை திரைப்படம் பற்றி அறிவிப்பு வந்தது முதலே போனிகபூர் அப்டேட் தருகிறாரோ இல்லையோ, அஜித் ரசிகர்கள் விதவிதமாக ஹேஷ்டேக் போட்டு படத்தை ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தனர். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் பல ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்த பிறகே, போனிகபூர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதனை அடுத்து ரசிகர்கள் கேட்காமலயே டீசர், டிரெய்லர், இன்ட்ரோ சாங் என படக்குழு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.