வலிமை திரைப்பட ரிலீஸ் தேதி வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியா முழுவதும் அதுபற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தற்போது வலிமை திரைப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாக உள்ளது என்ற தகவல் அஜித் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அஜித்குமார் கார் மற்றும் பைக் ரேஸிங்கில் கலக்குவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம், இந்த முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடேற்றும் வகையில் பைக்கில் பறந்து, பறந்து பயர் பறக்க அஜித் சண்டை போட்டுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் டிரெய்லர் மற்றும் டீசரில் வெளியாகி வைரலானது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களில் கூட பைக்கர் கெட்டப்பில் செம்ம மாஸாக அஜித் இருக்கும் போட்டோஸ் இடம் பெற்று தாறுமாறு வைரலானது. எனவே அஜித்தின் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த பொங்கல் அன்று திரைப்படம் வெளியாக தயாரான நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது பிப்ரவரி 24ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதற்கான புரோமோஷன் வேலைகள் ஒருபக்கம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் மொத்தம் 4000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த பட்டியலில் பாரிஸில் உள்ள உலகின் மிகப்பெரிய தியேட்டரான கிராண்ட் ரெக்ஸும் அடங்கும்.
இதனிடையே ரசிகர்கள் நேற்றிலிருந்து ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ கொண்டாட்டத்திற்காக டிக்கெட் வாங்க ஆரம்பித்துள்ளனர். தியேட்டர்கள் வாசலில் முண்டியடிக்கும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து வலிமை திரைப்படம் முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி வரை வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வெறித்தனமாக ரசிகர்கள் வலிமை படம் பார்க்க காத்திருக்கின்றனர்.
Got my #valimaifdfs tickets!!! 😬
— venkat prabhu (@vp_offl) February 21, 2022
எப்படியாவது FDFS டிக்கெட் எடுத்தே தீர வேண்டுமென ரசிகர்கள் தீயாய் தியேட்டர் வாசலில் காத்துக்கிடக்கின்றனர். இந்த சமயத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. அதில் தனக்கு வலிமை படத்திற்கான ‘ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ டிக்கெட்’ கிடைத்துவிட்டது என பதிவிட்டுள்ளார். உடனே அவருடைய அப்பா கங்கை அமரன், ‘பிரேம்ஜியை கூட்டிக்கிட்டு போ’ என பதிவிட்டிருக்கிறார். அதற்கு பிரேம்ஜியும், எனக்கு டிக்கெட் என பதிவிட்டிருக்கிறார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமே வலிமை படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க காத்திருக்கும் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kollywood, Valimai, Venkat Prabhu