Home /News /entertainment /

வலிமை வசூல் - விமர்சகர்களை நாய் என சாடிய தயாரிப்பாளர்

வலிமை வசூல் - விமர்சகர்களை நாய் என சாடிய தயாரிப்பாளர்

வலிமை

வலிமை

ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய எனிமி பட தயாரிப்பாளர் வினோத்குமார், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை குரங்கு என்றும் நாய் பிஸ்கட்டுக்கு அலைகிறவர்கள் என்றும் கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்திருந்தார்.

அஜித்தின் வலிமை கடந்த மாதம் வெளியானது. முதல் நாளில் படம் 36 கோடிகளை தமிழ்நாட்டில் வசூல் செய்ததாக சிலர் தெரிவித்தனர். இன்னும் சிலர் 15 கோடி தான் வசூலித்தது என்றனர். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் ஒருவர் விமர்சகர்களை கடுமையாக சாடி பேசியிருக்கிறார்.

வலிமை படம் வினோத்தின் சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் தரத்தில் இல்லை என்பது அனைவரும் ஒத்துக் கொண்ட உண்மை. இரண்டு வருடங்களுக்குப் பிறகு திரைக்கு வரும் அஜித் திரைப்படம் என்பதாலும், படத்தில் இடம்பெற்றிருந்த பைக் சண்டைக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்ததாலும் வலிமை படத்தை பார்க்க பெருமளவில் ரசிகர்கள் திரையரங்கில் திரண்டனர். இதனால் வலிமை நல்ல வசூலை பெற்றது. ஆனால் இவர்கள் சொல்லும் 36 கோடி, 15 கோடி கணக்குகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. படம் முதல் எட்டு தினங்களிலேயே தமிழகத்தில் 150 கோடியை தாண்டிவிட்டது என்பவர்களும் இருக்கிறார்கள். இந்த போலி வசூல் கணக்குகளை வைத்து இணையத்தில் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் வலிமை படத்தின் பட்ஜெட்டையும், அதன் வசூலையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை போன்ற  ஒரு சில இடங்கள் தவிர்த்து மற்ற ஏரியாக்களில் பிரேக் ஈவனையே படம் எட்டவில்லை என்ற ரீதியில் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். 112 கோடிக்கு மேல் செலவு செய்த தயாரிப்பாளருக்கு இந்தப் படத்தின் மூலம் 25 கோடிகள் மட்டுமே லாபம் கிடைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். சில ஏரியாக்களில் படம் நஷ்டம் அடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இது திரைத்துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

யூ-ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர் திருமணம் - ரசிகர்கள் வாழ்த்து!

இந்த கணக்கை திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் மறுத்து பேசியுள்ளார். வலிமை அனைத்துத் திரையரங்குகளுக்கும் லாபத்தை சம்பாதித்து தந்ததாக அவர் கூறியுள்ளார். ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய எனிமி பட தயாரிப்பாளர் வினோத்குமார், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரை குரங்கு என்றும் நாய் பிஸ்கட்டுக்கு அலைகிறவர்கள் என்றும் கடுமையாக தாக்கி பதிலடி கொடுத்திருந்தார். இவர்கள் பணத்திற்காக பேசுகிறவர்கள். பணம் தராவிட்டால்  இதே போல் கண்டதையும் உளறுவார்கள் என அவர் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!

ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி படத்தின் வசூலை பற்றி ரசிகர்களும், பொதுமக்களும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது அந்தப் படத்தை தயாரித்தவர், வாங்கியவர், திரையிட்டவர்களுக்கிடையிலான லாப நஷ்ட கணக்கு. இதில் சம்பந்தமில்லாத பிறர் தலையிடுவதே இத்தனை களேபரங்களுக்கு காரணம். இனிமேலாவது போலி வசூல் கணக்குகளிடமிருந்து ரசிகர்களும், பொதுமக்களும் தள்ளி இருப்பதே இணைய சுற்றுச்சூழலுக்கு நல்லது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Valimai

அடுத்த செய்தி