அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ திரைப்படம் நாளை (24 ம் தேதி) ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. அனைத்து டிக்கெட்டுகளும் ரிலீஸ் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே விற்பனை ஆகி, தற்சமயம் ஹவுஸ்ஃபுல்! இதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதே போல, விஜய் திரைப்படத்தின் சாதனையை வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே முறியடித்துள்ளது.
அஜித் மற்றும் வினோத் காம்பினேஷனில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள வலிமை, ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளை முறியடித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகிறது என்ற தகவல் வெளியாகி வருகின்றது. இந்நிலையில், விஜய் திரைப்படத்தின் சாதனையை வலிமை முறியடித்துள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் மற்றும் ஹெச்.வினோத் மீண்டும் இணையும் திரைப்படம் வலிமை. இதனாலேயே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோவிட் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கு இணங்கி படப்பிடிப்பு நடத்த வேண்டும் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் எந்த ஒரு பணியாளருக்கும், எந்த ஆபத்தும், தொற்று பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் வலிமை படக்குழுவினர் மிகவும் கவனமாக இருந்தனர்.
நடிகர்
அஜித்குமார் ஊரடங்கு தளர்வு அறிவித்து, படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டால் மட்டுமே படப்பிடிப்பை தொடர வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். இதனால் ஷூட்டிங் முடிய தாமாதமாகி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தள்ளிப்போனது. கடத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், அப்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இதனால் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதே போல, பொங்கலுக்கும் எதிர்பார்த்து ஏமாந்து போயினர். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுடன் காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவிப்பு வரும் போது தான் வலிமை திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.
இதையும் படிங்க.. valimai FDFS டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குநர்… அதற்கு அவரின் அப்பா ரியாக்ஷன் என்ன தெரியுமா?
ஃபிரான்ஸ் நாட்டிலும் வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஃபிரான்ஸ் நாட்டில் வெளியான இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாகி, கணிசமான வசூலைப் பெற்றது. தற்போது வலிமை திரைப்படம் வெளியாகாத நிலையில், ஃபிரான்சில் மாஸ்டர் படத்தின் மொத்த வசூலையும் முன்பதிவிலேயே தாண்டிவிட்டதாக பாக்ஸ் ஆஃபீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!
திரைப்படத்தின் மொத்த வசூலை அட்வான்ஸ் புக்கிங்கை விட அதிகமாக இருப்பது தற்போதைய கட்டுப்பாடுள்ள கால கட்டத்தில் மிகப்பெரிய சாதனையாகும். ஆனால், மாஸ்டர் படம் வெளியாகும் போது ஃபிரான்ஸ் நாட்டில் கடினமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.