• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெளியான வலிமை படத்தின் அஜித் ஸ்டில்: பைக் குறித்த விவரங்களைத் தேடும் நெட்டிசன்கள்

வெளியான வலிமை படத்தின் அஜித் ஸ்டில்: பைக் குறித்த விவரங்களைத் தேடும் நெட்டிசன்கள்

அஜித் குமார்

அஜித் குமார்

வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

  • Share this:
    போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது.

    இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்துகொண்டபோது நடிகர் அஜித்துக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அதனை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளைக் கடந்து விட்டபோது, படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக போனி கபூரிடம் படத்தின் அப்டேட் குறித்து கேட்டு ட்விட்டரை கலங்கடித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மதுரையில் அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு போஸ்டர் அடிக்கும் அளவுக்குச் சென்றது.

    இந்தநிலையில், வலிமை படத்தில் அஜித் குமார் பைக் ஓட்டும் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களை இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். மேலும், அஜித் ஓட்டும் பைக் குறித்த தேடல்களும் இணையத்தில் அதிகமாகியுள்ளது. அஜித் ஓட்டும் பைக்,



    எம்.வி அகஸ்டா ப்ருட்டேல் 800(MV Agusta Brutale 800) ஆகும். இந்த பைக்கின் இந்திய விலை 15.59 லட்சம் ஆகும். இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிறுவத்தின் பைக்தான் அகஸ்டா. இந்த நிறுவனத்தால் இந்தியாவில் விற்கப்படும் விலை குறைந்த பைக் இதுதான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: