Home /News /entertainment /

Valimai : வலிமை அஜித்தின் அட்டகாசமான புதிய படங்கள்

Valimai : வலிமை அஜித்தின் அட்டகாசமான புதிய படங்கள்

வலிமை அஜித்

வலிமை அஜித்

வலிமை படத்தில் அஜித்தின் புதிய புகைப்படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வலிமை படத்தில் அஜித்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை வெளியாகிறது.


அஜித் இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து  நடித்துள்ளார்.படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ரஷ்யாவில் படமாக்கினர்.


சமீபத்தில் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அஜித்துடன் ஹுமா குரோஷி நடித்துள்ளார். இதில் அவர் அஜித்தின் ஜோடி இல்லை என கூறப்படுகிறது.


ஆக்ஷன் காட்சிகளுடன் வலுவான அம்மா சென்டிமெண்டும் படத்தில் உள்ளது. ஜனவரி 13 ஆம் தேதி வலிமை வெளியாகிறது.


அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர்.அதே ஜனவரி 13 ஆம் தேதி வலிமையின் தெலுங்குப் பதிப்பையும் வெளியிடுகின்றனர். அதற்கு பலம் என பெயர் வைத்துள்ளனர்.


முதல்முறையாக இந்தியிலும் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். தெலுங்குப் படமான புஷ்பாவின் இந்திப் பதிப்பு 40 கோடிகளுக்கு மேல் வசூலித்திருப்பது வலிமை தயாரிப்பாளருக்கு கூடுதல் நம்பிக்கை அளித்துள்ளது.


ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் டெல்லி போன்ற சில மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட உள்ளன. கேரளாவிலும் தொற்று அதிகரித்து வருகிறது. இவை வலிமை உள்பட ஜனவரியில் வெளியாகும் படங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தத் தடைகளை கடந்து இந்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் படைத்த சாதனையை 2022 இல் வலிமை படைக்கும் என நம்பிக்கையாக உள்ளனர்.
Published by:Sreeja
First published:

Tags: Actor Ajith, Kollywood, Valimai

அடுத்த செய்தி