Home /News /entertainment /

சண்டைக் காட்சிகளால் பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட அஜித் - மருத்துவர் சொன்ன உண்மை!

சண்டைக் காட்சிகளால் பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட அஜித் - மருத்துவர் சொன்ன உண்மை!

அஜித்

அஜித்

தனது திரைப்படங்கள் மூலம் ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க விரும்பினார் அஜித். விழுந்தாலும் மீண்டும் எழலாம் என்பதே அந்தச் செய்தி

    படத்தின் சண்டைக் காட்சிகளால் கிட்டத்தட்ட பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு அஜித் தள்ளப்பட்டதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான தனது வலிமை படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார். இது அஜித்தின் ஸ்பெஷல் படங்களில் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் ஒரு தீவிர பைக் மற்றும் கார் பந்தய வீரர் என்பதை நாம் அறிவோம். ஆகையால் வலிமை படத்தில் பைக் ஸ்டண்ட்களுக்காக ரசிகர்களை சிலிர்க்கச் செய்தார்.

    பைக் ரைடர்ஸ் மற்றும் திருடர்கள் கும்பலைத் துரத்தும் ஆக்‌ஷன் படமான வலிமையில் அஜித், போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அஜித்தின் ரசிகர்கள் பலர் நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற ஸ்டண்ட்களை முயற்சிக்க நேரிடலாம். ஆனால் அஜித்தின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நரேஷ் பத்மநாபன் இதுபோன்ற ஆபத்தான செயல்களை பின்பற்ற வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

    அஜித் ஒரு பைக் பிரியர், ஆனால் ஸ்டண்ட் செய்யும் போது ஏகப்பட்ட காயங்கள் ஏற்பட்டதையும் பத்மநாபன் பகிர்ந்து கொண்டார். அதோடு அஜித் பலமுறை காயம் அடைந்து பக்கவாதத்திற்கு ஆளாக நேரிட்டதையும் அவர் தெரிவித்தார்.

    பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?

    ”அஜித் வலிமையில் விழும் காட்சியை மக்கள் இப்போது தான் பார்த்திருக்கிறார்கள். ஆனால், நான்கைந்து முறை அவர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் போது காயம் அடைந்துள்ளார். தனது திரைப்படங்கள் மூலம் ஒரு நேர்மறையான செய்தியை தெரிவிக்க விரும்பினார் அஜித். விழுந்தாலும் மீண்டும் எழலாம் என்பதே அந்தச் செய்தி” என்றார்.

    ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!

    அவரது அறுவை சிகிச்சைகளைப் பற்றி விவரித்த பத்மநாபன், ”அவரது செர்விக்கல் ஸ்பைனில், டிஸ்கெக்டோமி அறுவை சிகிச்சை இரண்டு நிலைகளில் செய்யப்பட்டது. நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தை ஏற்படுத்திய கீழ் பக்கமான முதுகெலும்பில் இருந்து ஒரு எலும்பு அகற்றப்பட்டது. கீழ் முதுகில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட பக்கவாதத்தால் அவதிப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு லும்பார் டிசெக்டமியும் செய்யப்பட்டுள்ளது. இரு முழங்கால் மூட்டுகளிலும் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அஜித்தின் இரு தோள்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் பைசெப்ஸ் தசைநார் கிழிந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அதை மீண்டும் இணைக்க வேண்டியிருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Tamil Cinema

    அடுத்த செய்தி