• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கை கூடிய கல்லூரி காதல்... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வலிமை நடிகர்!

கை கூடிய கல்லூரி காதல்... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வலிமை நடிகர்!

கார்த்திகேயா - லோஹிதா

கார்த்திகேயா - லோஹிதா

சூப்பர் ஹிட் தெலுங்கு படமான RX100 மூலம் புகழ் பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா, வலிமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

  • Share this:
    வலிமை பட நடிகர் கார்த்திகேயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

    'நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் அடுத்தப் படமாக ‘வலிமை’ படம் உருவாகி வருகிறது. அவரின் 60-வது படமான இதையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார். வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    சூப்பர் ஹிட் தெலுங்கு படமான RX100 மூலம் புகழ் பெற்ற கார்த்திகேயா கும்மகொண்டா, வலிமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவரும், லோஹிதா ரெட்டி என்பவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது, இரு வீட்டார் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 2010-ம் ஆண்டு என்.ஐ.டி. வாரங்கல்லில் கார்த்திகேயாவும், லோஹிதாவும் முதல் முறையாக சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெஸ்ட் ஃப்ரெண்ட், லைஃப் பார்ட்னராகியிருக்கிறார் என புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் கார்த்திகேயா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: