Home /News /entertainment /

வாய்தா பட நடிகை தற்கொலை - காதல் தோல்வியால் நேர்ந்த விபரீதம்!

வாய்தா பட நடிகை தற்கொலை - காதல் தோல்வியால் நேர்ந்த விபரீதம்!

நடிகை பவுலின் (எ) தீபா

நடிகை பவுலின் (எ) தீபா

தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாக கடிதம் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    வாய்தா திரைப்பட கதாநாயகி தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக்கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அறிமுக இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தீபாவின் உறவினர்கள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் போனை எடுக்காததால் அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது தீபா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ALSO READ | ‘ஒரு நாள் ஓய்வெடுத்து, பிறந்த நாளை கொண்டாடுங்கள்’ – மோடிக்கு வாழ்த்துச் சொன்ன நடிகர் ஷாரூக்கான்

    தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தீபா தற்கொலை செய்வதற்கு முன்பாக கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார்.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Actress, Commit suicide, Crime News, Deepa

    அடுத்த செய்தி