Home /News /entertainment /

ஜி.வி.பிரகாஷுக்கு பாட்டெழுதிய வீடியோவை பகிர்ந்த வைரமுத்து!

ஜி.வி.பிரகாஷுக்கு பாட்டெழுதிய வீடியோவை பகிர்ந்த வைரமுத்து!

தங்கர் பச்சான் - ஜி.வி பிரகாஷுடன் வைரமுத்து

தங்கர் பச்சான் - ஜி.வி பிரகாஷுடன் வைரமுத்து

கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு பாட்டெழுதிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு வைரமுத்து பாடல் எழுதுகிறார். 

அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த தங்கர் பச்சான், தற்போது கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கருமேகங்கள் ஏன் கலைகின்ற படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்களை உருவாக்கும் வேலைகளில் இயக்குனர் இறங்கியுள்ளார். ஜி.வி இசையில் வைரமுத்து பாடல் எழுதுகிறார்.  அவர்கள் மூவரும் பாடல் உருவாக்கும் பணியில் ஈடுபட்ட காட்சியை, பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் விநாயகர் சிலையை வடிவமைத்த ரஜினி ரசிகர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



அதில் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு பாட்டு எழுத கலை மேகங்கள் கூடிய தருணம்... மெட்டுக்கு பாட்டு எழுதினேன் என வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

 
Published by:Shalini C
First published:

Tags: Vairamuthu

அடுத்த செய்தி