வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல், கடலூரில் இருந்து 240 கி.மீ, சென்னையில் இருந்து 300 கி.மீ, தொலைவில் உள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று கணித்திருக்கிறது வானிலை மையம். இந்நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக, புதுச்சேரி அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இன்று இரவோ அல்லது நாளை அதிகாலையிலோ காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.