வடஇந்திய கலையுலகம் தமிழக பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை - வைரமுத்து

வட இந்திய திரையுலகம் தமிழ்நாட்டு பெண் கலைஞர்களை ஆதரிக்கும் அளவுக்கு ஆண் கலைஞர்களை ஆதரிப்பதில்லை என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடஇந்திய கலையுலகம் தமிழக பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை - வைரமுத்து
வைரமுத்து.
  • Share this:
வட இந்திய திரையுலகம் தமிழ்நாட்டு பெண் கலைஞர்களை ஆதரிக்கும் அளவுக்கு ஆண் கலைஞர்களை ஆதரிப்பதில்லை என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை வடக்கில் மட்டும் இல்லை” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்திருந்தார். அதில் இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும், சிலர் அவரை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாக ரஹ்மான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading