ட்விட்டரில் செம ஆக்டிவாக இருக்கும் வைரமுத்து அவ்வப்போது சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிடுவது வைரலாகிவருகிறது. மேலும் ஓடிடியில் தனக்கு பிடித்த சினிமாக்களையும் வைரமுத்து ரசிகர்களுக்கு பரிந்துரைத்துவருகிறார். அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸில் இருக்கும் 'டிரோல்' என்ற நார்வேஜியன் படத்தைப் பரிந்துரைத்தார்.
ட்ரோல் குறித்து அவரது பதிவில், ''ஹெலிகாப்படர்களைப் பிடித்து மடித்து உடைத்து எரியும் மலைப்பூதம் ஒன்று நகருக்குள் வந்துவிடுகிறது.
நார்வே அரசு அந்த உயரமான ஆபத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பது கதை. வியக்க வைக்கும் தொழில்நுட்பம். குழந்தை மனம் கொண்டவர்கள் ரசிக்கலாம். நானும் ரசித்தேன்'' என குறிப்பிட்டிருந்தார்.
97.3 விழுக்காடு
முதல் மதிப்பெண் பெற்ற
தனது தமிழ் விடைத்தாளை
என்னிடம் காட்டினாள்
கண்மணி மெட்டூரி
இதற்குத்
துணையிருந்தோர்க்கெல்லாம்
நன்றிசொல் கண்ணே என்றேன்
எனக்கு மகிழ்ச்சி
சந்ததியில்
தமிழ் தொடர்கிறது
உங்கள் வீட்டிலும்தானே! pic.twitter.com/IDnbNMG0T5
— வைரமுத்து (@Vairamuthu) December 19, 2022
இந்த நிலையில் தனது பேத்தி மெட்டூரி பள்ளி தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து பகிர்ந்துள்ளார். அதில், 97.3 விழுக்காடு முதல் மதிப்பெண் பெற்ற தனது தமிழ் விடைத்தாளை என்னிடம் காட்டினாள் கண்மணி மெட்டூரி.
இதற்குத் துணையிருந்தோர்க்கெல்லாம் நன்றி சொல் கண்ணே என்றேன். எனக்கு மகிழ்ச்சி. சந்ததியில் தமிழ் தொடர்கிறது. உங்கள் வீட்டிலும்தானே'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கவியரங்கத்துக்கு தலைமை தாங்கினார். நிகழ்வின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடும் படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vairamuthu