வைகைப் புயல் வடிவேலின் மறக்க இயலா, சிரிக்க வைக்கும் கதாபாத்திரமான ‘ நாய் சேகர்’ மீண்டும் திரையில் ரிட்டர்ன் ஆக இருப்பதால் இதைப் பற்றிய ஒரு தொகுப்பு.
படித்துறை பாண்டி, வீரபாகு, டெலக்ஸ் பாண்டியன், சூனாபானா, நாய் சேகர், வட்ட செயலாளர் வண்டு முருகன், ஸ்னேக் பாபு என வடிவேலின் அவதாரங்கள் இன்றும் தொலைக்காட்சியிலோ, மீம்ஸ்களிலோ விஸ்வரூபம் எடுத்து கொண்டிருப்பதை பார்க்கலாம்.
குறிப்பாக ‘தலைநகரம்’ திரைப்படத்தில் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயரான நாய் சேகர்’ பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனது. நாய் சேகர்’ நாய் சேகர்’ நாய் சேகர்’ என வடிவேலு உச்சரிக்கும் தொனியிலும் அவரின் அந்த உடல் மொழியிலும் சிரிப்பை கன்னாபின்னாவென சிதற விட்டிருந்தனர் தமிழ் திரை ரசிகர்கள்
இப்படி ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த ’நாய் சேகர்’ என்ற பெயரிலேயே வடிவேல் கதாநாயகனாக நடித்ததினால் ’வைகைப் புயல்’ வடிவேலு மீண்டும் நடிக்க வருவாரா என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்வலைகளை கொடுத்தது.
வடிவேலுவின் நடிப்பு கேரியரில் முக்கிய இடம் வகித்த ‘தலைநகரம்’, ‘மருதமலை’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் இயக்குநரான இயக்குநர் சுராஜ் இயக்கிய இத்திரைப்படத்தின் தலைப்பு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்பதும் சிரிப்பை இரட்டிப்பாக்கியது.
வடிவேல் முதன்முதலாக இந்த காலக்கட்டத்துக்கு உகந்த ஒரு நகைச்சுவை கதையான 'நாய் சேகர்'இல் நான்கைந்து கெட்டப்பில் வரும் செய்தியை சிரித்து கொண்டாடினார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் இதே வேளையில் இத்திரைப்படத்தின் தலைப்புக்கு ஒரு பிரச்சனையும் வந்தது. ‘ நான் வடிவேலின் தீவிர ரசிகன் என சொல்லி சதீஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ‘ நாய் சேகர்’ என்ற போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டரில் வெளியிட்டு சர்ச்சை தீயை பற்ற வைத்தார்.
Also read... இன்று மாலை வெளியாகிறது விஷாலின் லத்தி பட டீசர்!
நாய் சேகர் படத் தலைப்பு சம்மந்தமாக வடிவேலு நடிக்கும் நாய் சேகர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும்…. அதே பெயரில் சதிஸ் நடிக்கும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும் இடையே யாருக்கு இந்த ‘ நாய் சேகர்’ என போட்டியே நடந்தது. இறுதியில் வடிவேல் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘ நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பிட்டு மோஸன் போஸ்டர் வெளியானது.
அதுவும் ‘ஒரிஜினல்’ என்ற முத்திரையுடன் போஸ்டர் வெளிவந்து வடிவேலின் ரசிகர்களை ஆனந்த கூத்தாட வைத்தது. தமிழ் திரை உலகில் தலை காட்டாமல் தன் கோடான கோடி ரசிகர்களை வாட வைத்த வடிவேலு இந்த ‘ நாய் சேகர் டிட்டர்ன்ஸ்’ மூலம் காமடி புயலை மீண்டும் கரை கடக்காமல் அடிக்க வைப்பார் என உறுதியாக நம்புகிறது அவரின் சிரிப்பு பாசறை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu