நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.
இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரிக்கிறார். நேற்று இதன் பூஜை சென்னையில் நடைப்பெற்றது.
இந்நிலையில் தற்போது
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நாம் அனைவரும் இத்தனை காலம் மிஸ் செய்த வடிவேலுவை நிச்சயம் இந்தப் படத்தில் பார்க்கலாம் என மோஷன் போஸ்டரிலேயே தெரிந்துக் கொள்ள முடிகிறது. ஒரு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும் வடிவேலு, ‘ஏ ஹூ ஆர் யூ... அவ் அவ்.. ஹே ஹவ் ஆர் யூ? ஹே டாக் ஐ லைக் யூ... அதானே?’ என்று கேட்டு விட்டு ‘அவ்வ்வ்’ என தனது
சிக்னேச்சர் ஸ்டைலில் சொல்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள்
விண்டேஜ் வடிவேலு மீண்டும் வந்துவிட்டதாக உற்சாகமடைந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.