ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vadivelu: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Vadivelu: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ் எப்போது தெரியுமா?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படத்தில் வடிவேலுவும் ஒரு பாடலை பாடியிருப்பதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வடிவேலு நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நாய் சேகர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    நகைச்சுவை நடிகர் வடிவேலு, நான்காவது முறையாக இயக்குனர் சுராஜுடன் இணைந்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்க உள்ளார். இந்த நகைச்சுவை திரில்லர் படத்தில் அவர் துப்பறியும் நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    சமீபத்திய தகவல்களின்படி, நவம்பரில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படத்தில் வடிவேலுவும் ஒரு பாடலை பாடியிருப்பதாக தெரிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிப்பதா? திமுக எம்.பி திருச்சி சிவா அறிக்கை

    படத்தின் வெளியீட்டிற்கான வேலைகளை தற்போது தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர். ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையில், வைகை புயல், விஜய் சேதுபதியுடன் பெயரிடப்படாத படம், 'சந்திரமுகி 2' மற்றும் 'மாமன்னன்' ஆகிய படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vadivelu