ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Naai Sekar Returns: இது வெறும் பாடி பில்டப் தான்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய ப்ரோமோ!

Naai Sekar Returns: இது வெறும் பாடி பில்டப் தான்... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய ப்ரோமோ!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ப்ரோமோ

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ப்ரோமோ

இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி நாராயணன் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த நகைச்சுவை திரில்லர் படத்தில் அவர் துப்பறியும் நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி நாராயணன் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கிடையே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வரும் 9-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

ரன்வீர் சிங்கை பார்க்க வைத்து கேக் சாப்பிட்ட பூஜா ஹெக்டே - வைரலாகும் வீடியோ

' isDesktop="true" id="851227" youtubeid="II4EuqLmLRc" category="cinema">

இந்நிலையில் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், “காண்ட்ரக்டர் நேசமணி, வட்ட செயலாளர் வண்டு முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன்” என தனது அக்மார்க் நகைச்சுவை கதாபாத்திரங்களின் பெயர்களை கூறுகிறார். பின்னர் வடிவேலுவை நோக்கி, ”இது வெறும் பாடி பில்டப் தான்” என்கிறார் கிங்ஸ்லி. படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vadivelu