13 ஆண்டுகளுக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு, நடிகர் பிரபுதேவாவுடன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வைகைப்புயல் வடிவேலுவின் டைமிங் காமெடி மற்றும் முக பாவனைகளுக்கென்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. பார்த்திபன், பிரபுதேவா, சரத்குமார் போன்ற நடிகர்களுடன் அவர் இணைந்து செய்த காமெடிகள் அனைத்தும் எவர் கிரீன் ரகம். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவுடன், வைகை புயல் வடிவேலு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!
சில வருட இளைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிகராகவும், பாடகராகவும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் மீண்டும் வருகிறார். இந்தப் படத்தில் அவரது பாடல் ஏற்கனவே சிறப்பு வாய்ந்ததாக இருப்பதால், அதை மேலும் சிறப்பாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வடிவேலு பாடிய அந்த பாடலுக்கு, நடன இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இதன் மூலம் இந்த ஜோடி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
ஐஸ்வர்யாவை பிரிந்ததால் நிறைவேறாமல் போன தனுஷின் நீண்ட நாள் கனவு
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடலில் வடிவேலுவுடன் பிரபுதேவாவும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது. அவர் விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தவிர படக்குழு முன்னதாக லண்டனில் ஒரு இசை அமர்வை முடித்திருந்தது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.