முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய வடிவேலு!

மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய வடிவேலு!

மாமன்னன் டப்பிங்கில் வடிவேலு

மாமன்னன் டப்பிங்கில் வடிவேலு

இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுவரை நாம் பார்த்திடாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் வடிவேலு மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிவிட்டதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படங்களுடன் அறிவித்துள்ளது. 

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அவரின் ரெட்ஜெண்ட் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. கீர்த்தி சுரேஷ் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்கள் அழுத்தமான கதைகள் கொண்டதாக அமைந்தன. அந்த வகையில் மாமன்னன் படமும் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதில் வடிவேலுவின் கதாபாத்திரம் இதுவரை நாம் பார்த்திடாத வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பாக்யாவுக்கு புது ஜோடி? பாக்கியலட்சுமி சீரியலில் எண்ட்ரியான பிரபல நடிகர்!

இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் டப்பிங்கை, நடிகர் வடிவேலு தொடங்கிவிட்டதாக அந்த படங்களை வெளியிட்டுள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vadivelu, Mari selvaraj, Udhayanidhi Stalin