இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் - வடிவேலு உறுதி

வடிவேலு

இனிவரும் காலங்களில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் ஆணிவேராக இருந்த வடிவேலுவுக்கு 2011-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக வந்தபிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போனது. அதன்பின்னர், சுமார் பந்து ஆண்டுகள் வரை படங்கள் ஏதும் இல்லாமல் இருந்துவருகிறார். இடையில் மெர்சல் உள்ளிட்ட ஓரிரு படங்களில் மட்டும் அவர் தலைகாட்டினார். இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார்.

  இந்தநிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு ஏற்ப்பட்ட துன்பம் போன்ற துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்கமுடியாது. என் வாழ்க்கையில் பெரிய சூறாவளி அடித்தது.

  கொரோனோ காலகட்டத்தில் என்னுடைய காமெடியை பார்த்து மக்கள் மகிழ்ச்சியடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கொரோனா வந்தபிறகு என் பிரச்னை சாதாரணமாக சென்றுவிட்டது. முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபின் எனக்கு எல்லாம் நல்லதாக நடைபெற்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நண்பன் விவேக் மறைவு நாட்டுக்கும் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. அந்த இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் இயக்குநர் சங்கர் இயக்கத்திலோ, தயாரிப்பிலோ நடிக்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்கமாட்டேன் என்பதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: