மாமன்னன் படத்தில் வடிவேலு நடிக்கும் கதாபாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரியாகும் காமெடி நடிகர் வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ‘மாமன்னன்’ என்ற படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
தற்போது இந்த படத்தில் வடிவேலு புதிய பரிமாணத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக நடிப்பதாகவும், சில நகைச்சுவை கலந்த சீரியஸ் கேரக்டராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், ஃபஹத் பாசில் சமீபத்தில் ‘மாமன்னன்’ படத்தின் செட்டில் இணைந்தார்.
நீங்கள் யாருடைய மகன் என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் மகன் கூறிய பதில்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் மற்றும் செல்வா ஆர்.கே ஆகியோர் முறையே, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கர்ணன், பரியேறும் பெருமாள் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது படம் மாமன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.