நடிகர் வடிவேலு பிரபல பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.
இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஒப்பந்தமானார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் புரொமோஷனில் முழு வீச்சில் இறங்கினர் படக்குழுவினர்.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!
Our MOOD 🤩 when we realise we are gonna witness Vaigai Puyal #Vadivelu 🌪️ back on screens 📽️ after a long time!#NaaiSekarReturns 🐶💯 at screens near you tomorrow! 📽️#NaaiSekarReturnsOnDec9 🤩✨@Director_Suraaj 🎬 @Music_Santhosh 🎶 @thinkmusicindia 💿 @LycaProductions 🪙 pic.twitter.com/t1R1tacHgy
— Lyca Productions (@LycaProductions) December 8, 2022
இதற்கிடையே இன்ஸ்டகிராமில் பிரபலமான கச்சா பாதாம் ரீல்ஸ் பாடலுக்கு நடனமாடியுள்ளார் வடிவேலு. இது ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பைப் பெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu