ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் பட காமெடியை மறு உருவாக்கம் செய்த வடிவேலு - வீடியோ வெளியிட்ட ராதிகா!

விஜய் பட காமெடியை மறு உருவாக்கம் செய்த வடிவேலு - வீடியோ வெளியிட்ட ராதிகா!

வடிவேலு

வடிவேலு

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் சுறா படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் வடிவேலு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் சுறா படத்தின் காமெடி காட்சியை மறு உருவாக்கம் செய்து, ராதிகாவையும், ராகவா லாரன்ஸையும் சிரிக்க வைத்திருக்கிறார் வைகைபுயல் வடிவேலு. 

நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

சிறிது இடைவெளிக்குப் பிறகு சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்தாண்டு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

படத்தை விமர்சனம் செய்ய 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை மாறன்... ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

இதையடுத்து சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பி.வாசு. இந்தப் படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

முன்னணி மலையாள நடிகருடனான திருமணம் குறித்த வதந்திகளை மறுத்த நித்யா மேனன்!

இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் சுறா படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை மறு உருவாக்கம் செய்து காட்டியிருக்கிறார் வடிவேலு. அவரின் காமெடியைப் பார்த்து ராதிகாவும், லாரன்ஸும் வாய் விட்டு சிரிக்கிறார்கள். இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் ராதிகா, “திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் நம்மில் பலரை மகிழ்வித்துள்ளார். பிரபலமான காட்சியை மீண்டும் உருவாக்கியுள்ளார். எந்த பிரபலமான திரைப்படக் காட்சி என்று யூகிக்கவும்?” என்று கேட்டிருந்தார்.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலர் சுறா என பதிலளித்து வருகின்றனர்.

First published:

Tags: Actor Vadivelu, Radhika sarathkumar