Vadivelu: 13 ஆண்டுகளுக்குப் பின் வடிவேலுவை இயக்கும் பிரபல இயக்குநர்?

நடிகர் வடிவேலு

பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    துணை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி ஓரிரு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

    சமீபத்திய தகவலின் படி, 'எம்டன் மகன்' பட இயக்குனர் திருமுருகனின் அடுத்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும், வடிவேலுவும் இணைந்து நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த குடும்பப் படங்களை இயக்குவதில் நிபுணரான திருமுருகன், தனது மூன்றாவது படத்தை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்க உள்ளார். இதனை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

    Aishwarya Rajesh: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் ரீமேக்கில் ஹீரோயின் யார் தெரியுமா?

    மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான திருமுருகன், பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். நகைச்சுவை நிறைந்திருந்த அந்தப் படம் ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தை இயக்கினார் திருமுருகன். இந்தப் படத்திலும் நடிகர் பரத் மற்றும் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    இந்நிலையில் தனது மூன்றாவது படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்திற்காக வடிவேலுவையும், ஆர்.ஜே.பாலாஜியையும் முக்கியக் கதாபாத்திரத்திரங்களில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், அவரை மீண்டும் பெரிய திரைகளில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: