ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Naai Sekar Returns: எப்படி இருக்கிறது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!

Naai Sekar Returns: எப்படி இருக்கிறது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம். 

ஒரு இடைவெளிக்குப் பிறகு, சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் கடந்த வருடம் வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நகைச்சுவை திரில்லர் படத்தில் அவர் துப்பறியும் நபராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஆனந்த்ராஜ், யூ-ட்யூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி நாராயணன் மற்றும் லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கிடையே இன்று திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

வைகை புயல் வடிவேலு திரும்பி விட்டார். நாய் கடத்தல்காரராக, பல கடத்தல்களை செய்கிறார். 2வது பாதி வேறு திருப்பத்தை எடுக்கிறது.

உண்மையிலேயே வடிவேலு ரசிகை. ஆனால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஒரு ஏமாற்று வேலை. ஆரம்ப அரை மணி நேரம் சாதுவானது. ஒரு சில நகைச்சுவைகள் பரவாயில்லை. அதுவும் இல்லையெனில், படம் ஒன்றுமே இல்லை. திரைப்படங்களில் அவரது திறமை குறைவாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மனம் உடைகிறது. அவர் ஏன் தனக்குத் தகுதியானதை விட குறைவான விஷயங்களில் திருப்தி அடைகிறார் என்று தெரியவில்லை.

வடிவேலு, மியூசிக் மற்றும் பின்னணி இசை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பாஸிட்டிவ்.

படம் சுமாராக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vadivelu