ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் திரும்பி வந்தாரா பழைய வடிவேலு?

Naai Sekar Returns Review: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் திரும்பி வந்தாரா பழைய வடிவேலு?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

வடிவேலு 4 ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வடிவேலு 4 ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் வடிவேலு, ஆனந்த் ராஜ், சிவாங்கி, ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நாய்களை திருடி விற்பனை செய்யும் வடிவேலு, தன் குடும்பத்தில் இருந்து திருடப்பட்ட அதிர்ஷ்ட நாயை தேடி புறப்படுகிறார். அவர் நாயை மீட்டாரா? இல்லையா? என்ற இடத்தில் முடிகிறது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.

வடிவேலு நடிப்பில் கடந்த 11 ஆண்டுகளில் தெனாலிராமன், எலி, கத்திசண்டை, மெர்சல், சிவலிங்கா ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தது. இதனால் முழுக்க முழுக்க நகைச்சுவை படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை எடுக்க நினைத்தனர். அதற்காகவே சுராஜ் - வடிவேலு இணைந்தனர்.

ஒரு நகைச்சுவை நாயகன், அவனுக்கு மூன்று முட்டாள் நண்பர்கள் என்ற பழைய பார்முலாவையே கதையாக கையில் எடுத்துள்ளனர். வசனங்களாலும், முகபாவனையாலும் படத்தை மெருகேற்றிவிடலாம் என்று நினைத்துள்ளார்கள். இந்தப் படம் முழுவதும் வடிவேலுவின் குரல் கேட்டுகொண்டே இருக்கிறது. ஆனால் அது நகைச்சுவையாக ரசிக்க வைக்கிறதா என்றால் இல்லை.

வடிவேலு நகைச்சுவை சக்கரவர்த்தியாக வலம் வந்தவர். அவரின் நகைச்சுவை இல்லாமல் பலருக்கு நாட்கள் கடப்பதே இல்லை. அத்துடன் சமூக வலைதளங்களில் அவரின் மீம் காட்சிகள் தினம் தினம் நம் கண்களில் தென்படும். இது அவரும் தெரிந்து வைத்துள்ளாரோ என்று தோன்றுகிறது. ஏன் என்றால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு, வடிவேலுவாக நடிக்க முயற்சித்துள்ளார். இதனால் வடிவேலுவை தோற்றமாக மட்டுமே பார்க்க முடிகிறது.

சுராஜ் - வடிவேலு இணைந்த முந்தைய படங்கள் இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் நிலைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒருவித செயற்கைதனம் ஒட்டிகொண்டுள்ளது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்கள்!

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் எங்கோ தொடங்கி, எங்கோ சென்று, ஒரு கட்டத்தில் முடிக்க வேண்டுமே என்று முடித்தது போல் உள்ளது. வடிவேலு ரசிகர்களின் கலைஞன். அவர் தற்போதைய சூழலை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் நடித்தால் நிச்சயம் ஒரு மீண்டும் ஒரு ரவுண்ட் வருவர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு வடிவேலுவின் நகைச்சுவையை எதிர்பார்த்தே திரைக்கு ரசிகர்கள் வருவார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான். எத்தனையோ பெயர் தெரியாத படங்களுக்கு வடிவேலுவின் காமெடிகள் அட்ரஸாக இருந்துள்ளன. ஆனால் வடிவேலு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நகைச்சுவையே இல்லாமல் போனது வருத்தம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vadivelu