Home /News /entertainment /

Vadivelu: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பூஜையுடன் தொடக்கம்!

Vadivelu: வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பூஜையுடன் தொடக்கம்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது.

    நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்கியது.

    நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

    இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

    மேலும் படிக்க - வி.ஜே.சித்ரா முதலாமாண்டு நினைவு தினம்... ரசிகர்கள் உருக்கம்!

    இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தயாரிக்கிறார். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைப்பெற்றது. இதையடுத்து படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மட்டும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vadivelu, Tamil Cinema

    அடுத்த செய்தி