Home /News /entertainment /

கொரோனாவுக்குப் பின் பிரபல சீரியல் நடிகருடன் வடிவேலு!

கொரோனாவுக்குப் பின் பிரபல சீரியல் நடிகருடன் வடிவேலு!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு

கடந்த மாதம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

    சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட் நடிகர் வடிவேலுவுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் சீரியல் நடிகர் நந்தன்.

    நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நகைச்சுவை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்துள்ளார்.

    இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

    இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Nandan Loganathan (@nandanloganathan)






    இதற்கிடையே கடந்த மாதம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த வடிவேலு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் இருந்து குணமடைந்தார். இந்நிலையில் அவருடன் தான் எடுத்துக் கொண்ட சமீபத்திய படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சித்தி 2 சீரியல் நடிகர் நந்தன்.

    ’ஃபேன் பாய் மொமெண்ட்... உங்களுடன் ஒருநாள் நடிக்க ஆசைப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டு அந்தப் படத்தை பதிவிட்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vadivelu, Vadivelu, Vadivelu family

    அடுத்த செய்தி