நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணையும் வடிவேலு?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் இணையும் வடிவேலு?
வடிவேலு | கமல்ஹாசன்
  • News18
  • Last Updated: September 24, 2019, 6:26 PM IST
  • Share this:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் வடிவேலு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன், சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜமுந்திரியில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை முடித்த கையோடு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாகவும், படத்தில் வில்லன், ஹீரோ ஆகிய கதாபாத்திரங்களில் கமல்ஹாசனே நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேவர் மகன் படத்தில் வடிவேலு இசக்கி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தலைவன் இருக்கின்றான் படத்திலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசனின் அரசியல் பயணத்துக்கு இந்தப் படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் இந்தப் பட்டஹ்தை கமல்ஹாசனே இயக்க உள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே கமல்ஹாசனுடன்  சிங்காரவேலன், காதலா காதலா, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.EXCLUSIVE சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் - அதிர்ச்சி தகவல்

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading