ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் சேதுபதியுடன் இணையும் வடிவேலு...

விஜய் சேதுபதியுடன் இணையும் வடிவேலு...

வடிவேலு - விஜய் சேதுபதி

வடிவேலு - விஜய் சேதுபதி

வடிவேலு நடிப்பில் தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மற்றும் 'மாமன்னன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இணைந்து வடிவேலு நடிக்கவிருக்கிறார். 

  பான் இந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நடிகரான விஜய் சேதுபதி, சமீபத்தில் 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'சூது கவ்வும்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' பாணியில் முழுநீள காமெடி படத்தில் நடிக்கவிருக்கிறார்.

  இந்த புதிய படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், விஜய் சேதுபதிக்கு இணையாக வடிவேலு நடிப்பது தான். இந்தப் படத்தை 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' புகழ் ஆறுமுககுமார் தயாரித்து இயக்குகிறார். இது விஜய் சேதுபதியுடன் அவரின் இரண்டாவது படம். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் குறித்து விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காதலை அறிவித்த விஜய் டிவி நட்சத்திரங்கள் - குவியும் வாழ்த்துகள்!

  வடிவேலு நடிப்பில் தற்போது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' மற்றும் 'மாமன்னன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் கைவசம் வெற்றிமாறனின் ‘விடுதலை’, அட்லீயின் ‘ஜவான்’, கத்ரீனா கைஃபின் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ உள்ளிட்ட அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. இதற்கிடையே அவரது நீண்ட நாள் தயாரிப்பில் உள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actor Vadivelu, Actor Vijay Sethupathi