இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த பிறகே நகைச்சுவை வேடங்கள் - வடிவேலு!

வடிவேலு

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய்சேகர் திரைப்படம் அடுத்த மாதம் தொடங்குகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வடிவேலு நடிப்பதற்கு போடப்பட்டிருந்த ரெட் கார்டு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தனது அடுத்தக்கட்ட திட்டங்கள் பற்றி கூறியுள்ளார் வடிவேலு.

கவுண்டமணிக்குப் பிறகு தனியாளாக தமிழ் சினிமாவை ஆண்டவர் வடிவேலு. அவரது நகைச்சுவையை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. 2011 இல் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த காரணத்தால், அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வடிவேலுவை வைத்து யாரும் படம் பண்ணவில்லை. அவரும், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று ரசிக்க முடியாத படங்களாக நடித்துத் தள்ளினார். சுராஜின் கத்திச்சண்டையில் மறுபடியும் காமெடி வேடத்துக்கு திரும்பினார். ஆனால், அதையடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசியில் அவர் கொடுத்த இம்சையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடையை விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கும் வடிவேலு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம்தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.

Also read... தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வடிவேலு - ரசிகர்கள் உற்சாகம்!

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் நாய்சேகர் திரைப்படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அதையடுத்து மேலும் ஒரு படத்தில் அவர் நாயகனாக நடிக்கிறார். பிறகு பழைய வடிவேலுவை ரசிகர்கள் படங்களில் கண்டு ரசிக்கலாம்
Published by:Vinothini Aandisamy
First published: