முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாய் சேகர் ரிட்டர்ன்சில் வடிவேலின் குழல் ஒலிபெருக்கி ஹேர்ஸ்டைல்!

நாய் சேகர் ரிட்டர்ன்சில் வடிவேலின் குழல் ஒலிபெருக்கி ஹேர்ஸ்டைல்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

லைகா தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுடன் நிறைய நாய்களும் நடக்கின்றன. அத்துடன் குக்வித்  கோமாளி புகழ் சிவாங்கி, டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ரெடின்  கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்காக வடிவேலு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார். பார்த்தாலே சிரிப்பை தூண்டும் அந்த ஸ்டைலில் வடிவேலு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததை தொடர்ந்து அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. ஷங்கருக்கும், வடிவேலுக்கு நடந்த இந்த யுத்தம் நான்கு  வருடங்களுக்கு மேலாக நீடித்தது. இறுதியில் லைகா தலையிட்டு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்தது. அதனைத் தொடர்ந்து லைகாவின் நாய் சேகர் திரைப்படத்தில் வடிவேலு நாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை சுராஜ் இயக்குவார்ர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நகைச்சுவை நடிகர் சதீஷை வைத்து நாய் சேகர் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டது. இதனால் வடிவேலு படத்தின் பெயரை நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என மாற்றினர். இந்தப் படத்தில் குழல் ஒலிபெருக்கி வடிவில் ஹேர் ஸ்டைல் வைத்து  வடிவேலு நடிக்கிறார். இதற்குமுன் வில்லு  திரைப்படத்தில் இந்த ஹேர் ஸ்டைலில் அவர் நடித்திருந்தார். ஆனால் அது கோபுரம் போல இருக்கும். இதில் கொஞ்சம் குறைத்து குன்று போல்  ஹேர்ஸ்டைல உருவாக்கியுள்ளனர். குழந்தைகள் பார்த்தாலே சிரிப்பை தூண்டும் வகையில் இந்த ஹேர்ஸ்டைல் அமைந்துள்ளது.

Also read... மகானுக்காக விக்ரம், கார்த்திக் சுப்பராஜை புகழ்ந்து தள்ளிய அல்போன்ஸ் புத்திரன்

லைகா தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுடன் நிறைய நாய்களும் நடக்கின்றன. அத்துடன் குக்வித்  கோமாளி புகழ் சிவாங்கி, டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் ரெடின்  கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர். ஆனந்த்ராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளுசபா சேஷு ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் கோடையில் நாய் சேகர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Actor Vadivelu