ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடனமாடிய வடிவேலு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடனமாடிய வடிவேலு!

நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர்

நாய் சேகர் ரிட்டன்ஸ் ட்ரைலர்

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை செய்தியாளர்களுடன் இணைந்து நடிகர் வடிவேலு கொண்டாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை நடிகர் வடிவேலு விசில் அடித்து, நடனமாடி கொண்டாட்டினார்.

நடிகர் வடிவேலு நாயகனாக நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வரும் 9-ம் தேதி வெளியாகிறது. இதை முன்னிட்டு படத்தின் ட்ரெய்லரை பட குழுவினர் இன்று வெளியிட்டனர். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை செய்தியாளர்களுடன் இணைந்து நடிகர் வடிவேலு கொண்டாடினார். சென்னையில் உள்ள பிரபல மாலில் செய்தியாளர்கள் முன்னிலையில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியீட்டை விசில் அடித்து, நடனமாடி கொண்டாடினார் வடிவேலு.

அப்போது செய்தியாளர்களையும் தன்னுடன் நடனமாட வைத்து மகிழ்ந்தார். நடிகர் வடிவேலு சில ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்றுவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். அதை பூர்த்தி செய்யும் பழைய உற்சாகத்துடன் மீண்டும் வடிவேலு திரையில் தோன்ற உள்ளார்.

' isDesktop="true" id="848354" youtubeid="PM_dWlp0bRk" category="cinema">

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வடிவேலு நடனமாடிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vadivelu