• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நாய் சேகர் கதைவிவாதத்தில் வடிவேலு, சுராஜ்...!

நாய் சேகர் கதைவிவாதத்தில் வடிவேலு, சுராஜ்...!

வடிவேலு, சுராஜ்

வடிவேலு, சுராஜ்

சமீபத்தில் வடிவேலும், சுராஜும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து, படம் குறித்து விவாதித்தனர். கதை முடிவான நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வடிவேலு அடுத்து நடிக்கும் நாய் சேகர் படத்தின் கதைவிவாதத்தில் வடிவேலும், இயக்குனர் சுராஜும் கலந்து கொண்டனர்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிரச்சனை காரணமாக வடிவேலு கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் இந்தப் பிரச்சனை லைகா தலையீட்டால் தீர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் தொடர்ச்சியாக வடிவேலு நடிக்கும் படங்கள் வரவிருக்கின்றன. இதில் முதலிரு படங்கள் வடிவேலு நாயகனாக நடிக்கும் படங்கள். முதல் படமாக நாய் சேகர் தயாராகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலின் கதாபாத்திரப் பெயர் நாய் சேகர். அந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் பெருமளவில் பார்க்கப்படுகின்றன. கைப்புள்ள அளவுக்கு பிரபலமான கதாபாத்திரம் நாய் சேகர் என்பதால் அதையே படத்தின் பெயராக வைத்துள்ளனர்.

Also read... தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு திரைப்படங்கள்...!

சமீபத்தில் வடிவேலும், சுராஜும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்து, படம் குறித்து விவாதித்தனர். கதை முடிவான நிலையில், விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: