Home /News /entertainment /

Vada Chennai 2 : தனுஷின் வட சென்னை 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வெற்றிமாறன் சூப்பர் அப்டேட்

Vada Chennai 2 : தனுஷின் வட சென்னை 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? வெற்றிமாறன் சூப்பர் அப்டேட்

தனுஷ் - வெற்றிமாறன்

தனுஷ் - வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இதை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இணையவுள்ளார்

    தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் சூப்பர் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

    வெற்றிமாறன் -  தனுஷ் காம்போவில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய 4 படங்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்துமே விமர்சனம் மற்றும் வர்த்தக ரீதியில் மாபெரும் வரவேற்பு பெற்றன.

    தனுஷின் கேரியரில் இந்த 4 படங்களும் மிக முக்கியமாக அமைந்தன. தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அதில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்பதை இந்த படங்கள் நிரூபித்து இருந்தன.

    Actress Pranitha : கணவருக்கு பாத பூஜை செய்யும் சூர்யா பட நடிகை… புகைப்படங்கள் வைரல்

    வடசென்னை படம் முடிந்தபோது அடுத்த பாகத்திற்கான அறிமுகம் கிளைமாக்ஸ் காட்சியில் கொடுக்கப்பட்டிருக்கும். ‘வடசென்னை 2 அன்புவின் எழுச்சி’ என்று படத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். வடசென்னை வெளியாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

    வெற்றிமாறன் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அதில் செய்தியாளர்கள் கேட்கக்கூடிய கேள்விகளில், வட சென்னை 2 எப்போது வரும் என்பது இடம்பெறாமல் இருக்காது. அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து கிறார்கள்.

    விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் ரஜினியை சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாதவன்...

    இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெற்றிமாறன், தற்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் வடசென்னை 2 படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்று சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இதை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இணையவுள்ளார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

    கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து, தனுஷ் வடசென்னை 2  ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhanush, Director vetrimaran

    அடுத்த செய்தி