ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்

வாத்தி படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய தனுஷ்

தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, ஜி.வி. பிரகாஷ்

தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, ஜி.வி. பிரகாஷ்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வாத்தி படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இதற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கல்லூரி மாணவன் கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. இதையடுத்து வாத்தி படத்தில், கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவன் என இரு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Also read... தந்தையர் தினத்தை முன்னிட்டு தனுஷ் வெளியிட்ட ‘திருச்சிற்றம்பலம்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

இந்நிலையில் தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோருடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து, இந்தப் படத்தில் வெயிட்டான பாடல் ஒன்று இருப்பதாக ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor dhanush, GV prakash