இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் படம் ‘சார்’. இந்த திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.
ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை அறிவிக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், கல்லூரி கதைக்களத்தில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்பதையும் பறைசாற்றியது. அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தின. இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சார் / வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுற்றிலும் உள்ள அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்க, மேச்சியின் மீது எரிந்துகொண்டிருக்கும் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து மும்முரமாக ஏதோ முக்கியமான அசைன்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளான நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இதுபற்றி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி கூறும்போது, “இந்த படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாதராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” என்கிறார்.
சார் படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படம் குறித்த இன்னும் சுவாரசியமான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.