முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'தமிழகத்தில் இட ஒதுக்கீடு.. என் எண்ணம் வேறு' - வைரல் வீடியோவுக்கு பதில் அளித்த வாத்தி இயக்குநர்

'தமிழகத்தில் இட ஒதுக்கீடு.. என் எண்ணம் வேறு' - வைரல் வீடியோவுக்கு பதில் அளித்த வாத்தி இயக்குநர்

வாத்தி

வாத்தி

தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறித்த சூழல் எனக்கு தெரியாது என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிற்றம்பலம் படம் வெற்றிக்குப் பின் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா நடித்துள்ள திரைப்படம் வாத்தி. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். இவருடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன் இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் இந்தப் படம் 'சார் ' என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் வாத்தி படத்துக்கு, தமிழில் கலவையான விமர்சனங்களே கிடைத்துவருகின்றன.இந்த நிலையில் இட ஒதுக்கீடு குறித்து இயக்குநர் வெங்கட் அட்லுரி கடந்த சில தினங்களுக்கு முன் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாத்தி படம் குறித்து தெலுங்கு சேனலுக்கு வெங்கி அட்லுரி அளித்த பேட்டியில் அவரிடம், நீங்கள் கல்வி அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அவர், இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்து விடுவேன். சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது. பொருளாதாரா ரீதியிலான இட ஒதுக்கீட்டை மட்டும் நடைமுறைப்படுத்துவேன் என்று பேசியிருந்தார். இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், வாத்தி படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு வெங்கி அட்லூரி அளித்த பேட்டியில், தமிழகத்தில் இட ஒதுக்கீடு குறித்த சூழல் எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய எண்ணம் என்னவென்றால் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலே நான் பேசி இருந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: