Vaathi Coming: 150 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாத்தி கம்மிங் பாடல்

Vaathi Coming: 150 மில்லியன் பார்வைகளைக் கடந்த வாத்தி கம்மிங் பாடல்

வாத்தி கம்மிங் பாடல்

க்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

  • Share this:
    ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூ-ட்யூபில் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

    கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.



    'குட்டி ஸ்டோரி’, ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். மாஸ்டர் படம் வெளியான பிறகு அதன் வீடியோ வெளியானது. இந்நிலையில் தற்போது யூ-ட்யூபில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: