Home /News /entertainment /

‘வாத்தி கம்மிங்…’ – விம்பிள்டன் பதிவை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…

‘வாத்தி கம்மிங்…’ – விம்பிள்டன் பதிவை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்…

ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர்

Wimbledon vaathi coming : முதலில் இந்த தகவல் வெளிவந்த போது, அதை சிலர் நம்பாமல் பொய்யான செய்தி என்று கூறி வந்தனர்.

    பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் வருகையை, மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் வரிகளுடன் விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயர்வானதாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கருதப்படுகிறது. தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் 8 முறை பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் பங்கேற்கவில்லை. இது அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க - அரசியலில் நுழையும் எந்த எண்ணமும் இல்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

    இந்நிலையில் விம்பிள்டன் சென்டர் கோர்ட்டின் நூற்றாண்டு விழாவைக் காண பெடரர் வந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் விம்பிள்டன் பதிவிட்டு ‘வாத்தி கம்மிங்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.



    இது மாஸ்டர் படத்தில் வரும் பாடல் வரிகள் என்பதால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விம்பிள்டன் பக்கத்தில் உள்ள ரோஜர் பெடரர் பதிவை லைக், ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.

    மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த பாடலுக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யாத பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பாடல் ரீச் ஆகியுள்ளது.

    தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த முதல் தமிழ் படம் 

    இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற விம்பிள்டனுக்கு வாத்தி கம்மிங் சென்றுள்ளதால் மாஸ்டர் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதலில் இந்த தகவல் வெளிவந்த போது, அதை பலரும் நம்பாமல் பொய்யான செய்தி என்று கூறி வந்தனர். பின்னர், விம்பிள்டன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று பார்த்தபோதுதான் வாத்தி கம்மிங் சம்பவம் உண்மைதான் என உணர்ந்தனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Vijay

    அடுத்த செய்தி