Home /News /entertainment /

சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வாடிவாசல் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு…

சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வாடிவாசல் அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் தாணு…

வாடிவாசல் படக்குழுவினர்

வாடிவாசல் படக்குழுவினர்

Suriya birthday : வாடிவாசலை தவிர்த்து, சூர்யா நடிக்கவுள்ள மற்ற சில படங்களின் அறிவிப்புகளும் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூர்யாவின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அவர் நடித்து வரும் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.  இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசைஆகிய பிரிவுகளுக்காக சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படவுள்ளது.

    இதையொட்டி சூர்யாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தம்பி சூர்யா என அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    Suriya: சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது - மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு!

    இந்நிலையில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இன்று வெளியிட்டுள்ளார். இதன்படி வாடிவாசல் படத்திற்காக காளைகளுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள், பிறந்த நாள் பரிசாக ரசிர்களுக்கு நாளை வெளியாக உள்ளது.



    வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். செல்லப்பா எழுதிய நாவலின் அடிப்படையில் வாடிவாசல் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகப் பெரும் பொருட் செலவில், வாடிவாசல் படத்தை பிரமாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் - தேசிய விருது வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

    வாடிவாசலை தவிர்த்து, சூர்யா நடிக்கவுள்ள மற்ற சில படங்களின் அறிவிப்புகளும் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya, Director vetrimaran

    அடுத்த செய்தி