வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷுட் சென்னை புறநகரில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
தொடர்ந்து நாவல்களை படமாக்கிவருகிறார் வெற்றிமாறன். லாக்கப் நாவலை விசாரணை என்றும், வெக்கை நாவலை அசுரன் என்றும் படமாக்கியவர், தற்போது விடுதலை என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இதுவும் ஜெயமோகன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை படமாக்குகிறார். தனது படத்துக்கும் வாடிவாசல் என்றே பெயர் வைத்துள்ளார்.
சமந்தாவுக்கு சண்டை சொல்லித்தரும் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்
முந்தைய நாவல்களை படமாக்குகையில் எப்படி நாவலுக்கு வெளியே கற்பனையாக கதையை எழுதி சேர்த்தாரோ அதுபோல் வாடிவாசல் நாவலிலும் வெற்றிமாறனே எழுதியிருக்கும் புனைவும் இடம்பெறுகிறது. சூர்யா நடிக்கும் இந்தப் படத்தை தாணு தயாரிக்க, ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
வாடிவாசலின் முன்தயாரிப்பு பல வாரங்களாக நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு காட்சிகளை யதார்த்தமுடன் படமாக்குவது அவசியம். அதற்கான தயாரிப்புகள் நீண்ட காலத்தை எடுக்கக் கூடியவை. ஏற்கனவே சூர்யா மாடுபிடிக்க பயிற்சி எடுத்துள்ளார். சென்னை இசிஆரில் வாடிவாசல் படத்தில் டெஸ்ட் ஷுட் நடந்தது. இதில் சூர்யா கலந்து கொண்டார்.
தனுஷின் நேற்று இல்லாத மாற்றம்!
இந்தப் படத்தில் நடிகர் கருணாஸ் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்ற உள்ளார்.
எதற்கும் துணிந்தவனுக்குப் பிறகு பாலா நடிக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில், வாடிவாசல் டெஸ்ட் ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால், முதலில் வாடிவாசல் படம் தொடங்கப்படும் என்ற பேச்சு உள்ளது. ஆனால், பாலா படம்தான் முதலில் தொடங்கப்படும் என உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.