Home /News /entertainment /

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது…

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது…

வெற்றி மாறனுடன் சூர்யா

வெற்றி மாறனுடன் சூர்யா

Vaadivaasal Video : மிகப் பெரும் பொருட் செலவில், வாடிவாசல் படத்தை பிரமாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை வாடிவாசல் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசைஆகிய பிரிவுகளுக்காக சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படவுள்ளது.

    இதையொட்டி சூர்யாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தம்பி சூர்யா என அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இதன்படி வாடிவாசல் படத்திற்காக காளைகளுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள், பிறந்த நாள் பரிசாக ரசிர்களுக்கு இன்று மாலை 5.30-க்கு வெளியாக உள்ளது.

    செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து…

    வாடிவாசல் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். செல்லப்பா எழுதிய நாவலின் அடிப்படையில் வாடிவாசல் திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த படத்தில் சூர்யாவுடன் இயக்குனர் அமீர் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிகப் பெரும் பொருட் செலவில், வாடிவாசல் படத்தை பிரமாண்டமாக உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி