ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாடிவாசல் திரைப்படம் குறித்து வெற்றிமாறன் கூறிய சூப்பர் அப்டேட்!

வாடிவாசல் திரைப்படம் குறித்து வெற்றிமாறன் கூறிய சூப்பர் அப்டேட்!

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

வாடிவாசலில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வாடிவாசல் திரைப்படம் 1960-களில் நடக்கும் கதை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். 

  சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் வாடிவாசல். இதனை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். நாவலின் வாடிவாசல் என்ற பெயரையே திரைப்படத்திற்கும் வைத்துள்ளார். வெற்றிமாறன் இதற்கு முன் லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரில் எடுத்திருந்தார். அவரது அசுரன் திரைப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

  வாடிவாசல் படத்தை தாணு தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறன், சூர்யா முதல்முறையாக இணையும் படம் என்பதாலும், வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை என்பதாலும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாடிவாசலில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

  7 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் ரிலீசாகும் 'இடம் பொருள் ஏவல்'!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் பேசிய வெற்றிமாறன், “பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை” எனத் தெரிவித்துள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Director vetrimaran