முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / WATCH: ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க... தனுஷ் குரலில் வெளியான வா வாத்தி பாடல்!

WATCH: ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க... தனுஷ் குரலில் வெளியான வா வாத்தி பாடல்!

தனுஷ்

தனுஷ்

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாத்தி படத்திலிருந்து தனுஷ் குரலில் ’வா வாத்தி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக தனுஷ் நடித்துள்ளார். சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான வா வாத்தி பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது தனுஷ் வா வாத்தி பாடலை பாடகி ஸ்வேதா மோகனுடன் இணைந்து பாடினார். அப்போது ரசிகர்கள் இந்த பாடல் தனுஷின் குரலில் வேண்டும் என்று கோரிக்கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதனை தொடர்ந்து படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது தனுஷின் குரலில் வா வாத்தி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

' isDesktop="true" id="897433" youtubeid="8s2DQBhEvoA" category="cinema">

நன்றி: Aditya Music Tamil.

First published:

Tags: Actor Dhanush, Movie Video Songs